Monday, 28 January 2013

vatham pittham kabam

அனுபவ வைத்தியம்  - 1


            வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம்அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .

            இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம்
  பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம்  பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய்  விட்டு சாப்பிடலாம் .

        வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம்  ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம்  செய்யும்  போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.
                                                                                                                                                                                நன்றி
                                                                                                                                                                    கனிமொழி இதழ் 
                                                                                                                   கே.பாலசுந்தரி. எம் .எ                                                                                                                                                                      மாங்குடி       

Courtesy: saivathedal.weebly.com

traditionalmedicine0001


பாரம்பரிய இயற்கை மருத்துவம்..!

1.    மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

2.    ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.

3.    வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.

4.    கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.

5.    வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.

6.    புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

7.    சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும்.

8.    தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.

9.    அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.

10    .மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

தெரிந்தும் பேசாத தமிழ்ச் சொற்கள்

டிவி - தொலைகாட்சி                                  பேன் -மின்விசிறி
ரேடியோ-வானொலி                                   சேர் -நாற்காலி
டிபன் -சிற்றுண்டி                                            லைட் -விளக்கு
கரண்ட்-மின்சாரம்                                         தம்ளர் -குவளை

சைக்கிள் -மிதிவண்டி                                  டெலிபோன் -தொலைபேசி
பிளாட்பாரம் -நடைபாதை                        சினிமா -திரைப்படம்
டைப்ரைட்டர் -தட்டச்சுப்பொறி             ஆபீஸ் -அலுவலகம்
ரோடு -சாலை                                           
        ப்ளைட் -விமானம்
பேங்க் -வங்கி                                           
        தியேட்டர் -திரைஅரங்கு
ஆஸ்பத்திரி -மருத்துவமனை                கம்ப்யு ட்டர் -கணினி   
காலேஜ்-கல்லூரி                                      
    ஸ்வீட் ஸ்டால் -இனிப்பகம்
ஸ்கூல் -பள்ளி                               
                    யுனிவர்சிட்டி -பல்கலைக்கழகம்     டெலஸ்கோப்-தொலைநோக்கி            தெர்மோமீட்டர் -வெப்பமானி
நம்பர் -எண்                                   
                          மைக்ராஸ் கோப்-நுண்ணோக்கி